Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆஸ்திரேலியா: விக்டோரியாவில் சுமார் 2,000 பேருக்குக் கிருமித்தொற்று - 11 பேர் மரணம்

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் புதிதாகச் சுமார் 2,000 பேரிடம்  கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் 11 பேர் மாண்டனர். 

வாசிப்புநேரம் -

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் புதிதாகச் சுமார் 2,000 பேரிடம் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் 11 பேர் மாண்டனர்.

நீண்டகாலம் நீடித்த தொடர் முடக்கம் தளர்த்தப்பட்டு மெல்பர்ன் மக்கள் சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர்.

நாள்தோறும் புதிதாக நூற்றுக்கணக்கானோருக்கு நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்படுகிறது.

விக்டோரியாவில் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் விகிதம் 80 விழுக்காட்டை அடைந்தவுடன் மேலும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன.

தற்போது அங்கு 16 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையோரில் 73 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் முழுமையாகத் தடுப்பூசி போட்டு முடித்துள்ளனர்.

நியூ சௌத்வேல்ஸில் புதிதாக சுமார் 300 பேருக்கு நோய்த்தொற்று அடையாளம் காணப்பட்டது. மேலும் நால்வர் மாண்டனர்.

அங்கு வசிக்கும் 16 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையோரில் 84 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் முழுமையாகத் தடுப்பூசி போட்டு முடித்துள்ளனர். COVID-19உடன் வாழும் நிலையை அடைந்து கொண்டிருக்கிறது நியூ சௌத் வேல்ஸ் மாநிலம்.

முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைத்துலகப் பயணிகளுக்கு அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து அனுமதி வழங்கப் போவதாக சிட்னியும் மெல்பர்னும் அறிவித்துள்ளன. மற்ற நகரங்களும் விரைவில் அந்த நடைமுறையைப் பின்பற்றக்கூடும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்