Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

16 வயதுக்கு உட்பட்டோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தப் பெற்றோரின் அனுமதி வேண்டுமா?

ஆஸ்திரேலியா, 16 வயதுக்கு உட்பட்டோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தப் பெற்றோரின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற சட்டத்தைக் கொண்டு வரத் திட்டமிடுகிறது.

வாசிப்புநேரம் -

ஆஸ்திரேலியா, 16 வயதுக்கு உட்பட்டோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தப் பெற்றோரின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற சட்டத்தைக் கொண்டு வரத் திட்டமிடுகிறது.

அந்தச் சட்டத்திற்கு இணங்காத இணையத் தளங்களுக்கு 7.5 மில்லியன் டாலர் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

சமூக ஊடக நிறுவனங்கள், பயனீட்டாளர்களின் வயதை நிர்ணயிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.

பரிந்துரைக்கப்பட்ட புதிய விதிமுறைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் சமூக ஊடகங்களுக்கு ஆகக் கடுமையான வயது வரம்புகளை விதிக்கும் நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா இருக்கும்.

ஆஸ்திரேலியர்களின் தகவல்களையும் அந்தரங்கத்தையும் பாதுகாப்பதே அந்தச் சட்டத்தின் இலக்கு என்று கூறப்பட்டது.

-Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்