Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆஸ்திரேலியா: சுற்றுப்பயணத் துறையைச் சீரமைக்க 52 மில்லியன் டாலர் நிதித் திட்டம்

ஆஸ்திரேலிய அரசாங்கம் சுற்றுப்பயணத் துறையைச் சீரமைக்க 52 மில்லியன் டாலர் நிதித் திட்டத்தை அறிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
ஆஸ்திரேலியா: சுற்றுப்பயணத் துறையைச் சீரமைக்க 52 மில்லியன் டாலர் நிதித் திட்டம்

(படம்:AFP/PETER PARKS)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

ஆஸ்திரேலிய அரசாங்கம் சுற்றுப்பயணத் துறையைச் சீரமைக்க 52 மில்லியன் டாலர் நிதித் திட்டத்தை அறிவித்துள்ளது.

அண்மையில் பெய்த கனமழையினால் பல மாதங்களாக பற்றி எரியும் காடுகள் சிலவற்றில் தீ கட்டுக்குள் வந்துள்ளது.

அதைத் தொடர்ந்து சுற்றுப்பயணத் துறைக்கு மீண்டும் புத்துயிரூட்ட அந்த நிதி உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மைய வாரங்களில் காட்டுத்தீச் சம்பவங்களின் எண்ணிக்கை 100க்குக் குறைவாகப் பதிவானது. சுமார் 29 பேர் காட்டுத்தீயால் மாண்டனர்.

மில்லியன் கணக்கான விலங்குகள் தீக்கு இரையாகின.

காட்டுத்தீயால் சுற்றுப்பயணத் துறைக்கு சுமார் 1 பில்லியன் ஆஸ்திரேலியா டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுற்றுப்பயணத் துறை மன்றம் தெரிவித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்