Images
  • vaccine covid
    (படம்: James Gourley via AP)

ஆஸ்திரேலியாவில் 12 முதல் 15 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு Pfizer-BioNTech தடுப்பூசி போட ஒப்புதல்

ஆஸ்திரேலியா, 12 வயதுக்கும், 15 வயதுக்கும் இடைப்பட்ட பிள்ளைகளுக்கு, Pfizer-BioNTech COVID-19 தடுப்பூசி போட ஒப்புதல் அளித்திருக்கிறது.

நாட்டின் மூன்று மாநிலங்கள், டெல்ட்டா வகைக் கிருமியின் பரவலைக் கட்டுப்படுத்த முயன்று வரும் வேளையில், சுகாதார அமைச்சர் கிரெக் ஹன்ட் (Greg Hunt) அது பற்றி அறிவித்தார்.

உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் நடத்தப்பட்ட ஆய்வுகளைத் தீர ஆராய்ந்த பிறகு, அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் ஆகியவற்றிலும் சில வாரங்களுக்கு முன்பு அது போன்று, பிள்ளைகளுக்குத் தடுப்பூசி போட ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தது.

இதுவரை, ஆஸ்திரேலியாவில், 16 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினருக்கு மட்டுமே Pfizer-BioNTech தடுப்பூசி போட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

- Reuters/aj

Top