Images
  • Australia website
    படம்: AFP/Sanka VIDANAGAMA

கிரைஸ்ட்சர்ச் தாக்குதல் காணொளிகளைக் கொண்ட இணையத்தளங்கள் ஆஸ்திரேலியாவில் தடை

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

நியூசிலந்தில் நடந்த கிரைஸ்ட்சர்ச் தாக்குதல்கள் தொடர்பான அம்சங்களை  வெளியிட்ட 8 இணையத்தளங்களைத் தடைசெய்ய இணையச் சேவை வழங்குநர்களிடம் ஆஸ்திரேலியா உத்தரவிட்டுள்ளது.

புதிய தணிக்கை விதிமுறைகள் நடப்புக்கு வந்தபின் இணையத்தளங்கள் தடைசெய்யப்பட்டிருப்பது இது முதல்முறை. 

தாக்குதல்கள் காணொளி மூலம் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட சம்பவத்துக்குப்பின் கான்பரா தனது தணிக்கை விதிமுறைகளை மறுபரிசீலனை செய்தது.

தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களில் ஒன்று இஸ்லாமிய சமயத்தைப் பற்றித்  தவறாய் எழுதியிருந்தாக அரசாங்கத் தரப்பு தெரிவித்தது.

இவ்வகையான அருவருக்கத்தக்க பதிவுகள் ஆஸ்திரேலியாவில் சகித்துக்கொள்ளப்படமாட்டா என ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மொரிசன் (Scott Morrison) கூறினார்.

தீவிரவாதிகள் தங்கள் குற்றங்களையும் தாக்குதல்களையும் பெரிதாகப் பேசி அவர்கள் பெருமைப்பட்டுக்கொள்வதற்கு வாய்ப்பு வழங்காமல் இருப்பதில் ஆஸ்திரேலியாவிலும் உலகளவிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் சொன்னார்.  

தினமும் 24 மணிநேரம் செயல்படும் நெருக்கடிகால ஒருங்கிணைப்பு நிலையம் (Crisis Coordination Centre) தீவிரவாத வன்முறைச் சம்பவங்களைத் தணிக்கை விதிமுறைகளின்படி கண்காணிக்கும்.


Top