Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆஸ்திரேலியாவில் தொடரும் காட்டுத் தீச் சம்பவங்கள்

ஆஸ்திரேலியாவின், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஐந்து பகுதிகளில் காட்டுத் தீச் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அவசரகால எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
ஆஸ்திரேலியாவில் தொடரும் காட்டுத் தீச் சம்பவங்கள்

(படம்: AFP/PETER PARKS)

ஆஸ்திரேலியாவின், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஐந்து பகுதிகளில் காட்டுத் தீச் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அவசரகால எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது அங்கு நிலவும் காட்டுத் தீச் சம்பவங்ளே அந்நாட்டில் நெடுங்காலம் நீடிக்கும், ஆக மோசமான தீச் சம்பவங்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.

கடந்த மாதத் தொடக்கத்தில் இருந்து பற்றி எரியும் காட்டுத் தீயால், குறைந்தது 4 பேர் மாண்டனர்.

680-க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்தன.

சிட்னி நகரின் காற்றுத் தரம் மோசமடைந்ததற்கும் காட்டுத் தீ ஒரு காரணமாக இருந்துள்ளது.

சுவாசப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட மேலும் அதிகமானோர் சிகிச்சை நாடி மருத்துவமனைகளுக்குச் செல்வதாகச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்