Images
ஆஸ்திரேலியா: காட்டுத் தீயில் இருவர் மரணம், 100 வீடுகள் சேதம்
ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயில் குறைந்தது 2 பேர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனம் ஒன்றிலிருந்து ஒரு சடலம் மீட்கப்பட்டதாகவும் சுவாசிக்க சிரமம் கண்ட பெண் ஒருவர் சிகிச்சை பெறும்போது மாண்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.
மேலும் இருவரைக் காணவில்லை.
சுமார் 100 வீடுகள் தீயில் கடும் சேதமடைந்தன.
காட்டுத் தீயின் நிலை இன்று மேலும் மோசமடையலாம் என நியூ சவுத் வேல்ஸ் (New South Wales) மாநிலத் தீயணைப்புத் துறை தெரிவித்தது.
அதுவே ஆஸ்திரேலியா கண்டுள்ள ஆக மோசமான காட்டுத் தீ என வருணிக்கப்படுகிறது.
நாட்டின் சில பகுதிகளில் இதுவரை இல்லாத அளவு கடுமையான வறட்சி நிலவுகிறது.