Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமைப்பு ரீதியாக சிறுவயதில் பாலியல் சித்திரவதை - ஆஸ்திரேலியாவின் பொதுமன்னிப்பு

ஆஸ்திரேலிய அரசாங்கம் இவ்வாறு பொதுப்படையாக மன்னிப்பு வழங்குவது அரிது.  

வாசிப்புநேரம் -


ஆஸ்திரேலியப் பிரதமர் மால்க்கம் டர்ன்புல் (Malcolm Turnbull) அமைப்பு ரீதியாக சிறுவயதில் பாலியல் சித்திரவதைக்கு ஆளானவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மன்னிப்பு வழங்கும் உரையைப் பொதுப்படையாக வழங்கவுள்ளார்.

அக்டோபர் 22ஆம் தேதியன்று தாம் அந்த உரையை வழங்கவுள்ளதாக அவர் இன்று (ஜூன் 13) தெரிவித்தார்.

ஐந்தாண்டுகளாக நடத்தப்பட்டுவந்த விசாரணையில் சிறுவயதில் ஏற்பட்ட பாலியல் சித்திரவதை தொடர்பில் 8,000க்கும் மேற்பட்ட சம்பவங்கள் விசாரிக்கப்பட்டன.

அவற்றில் பெரும்பாலனவை பிள்ளைகளின் பாதுகாப்பிற்குப் பொறுப்பு வகிக்கும் அரசாங்க அமைப்புகளிலும் சமய அமைப்புகளிலும் நிகழ்ந்தவை.

விசாரணையில் முன்வைக்கப்பட்ட 122 பரிந்துரைகளில் 104 பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்கும் என்று திரு. டர்ன்புல் கூறினார்.

மேலும் 18 பரிந்துரைகளை அந்நாட்டு அரசாங்கம் கருத்தில் கொண்டுள்ளது.

தங்கள் கவனத்துக்கு வரும் சிறுவயது பாலியல் சித்திரவதைச் சம்பவங்களைச் சமயத் தலைவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொண்டுசெல்ல வேண்டும் என்பது பரிந்துரைகளில் ஒன்று.

பாவ மன்னிப்பின்போது கூறப்படுபவற்றை ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற கத்தோலிக்க விதியை மீறிய செயலாக அது கருதப்படும்.

ஆஸ்திரேலிய அரசாங்கம் இவ்வாறு பொதுப்படையாக மன்னிப்பு வழங்குவது அரிது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்