Images
  • australia covid (1)
    (படம்: AFP/Patrick HAMILTON)

ஆஸ்திரேலியாவில் இவ்வாண்டின் ஆக அதிகமான கிருமித்தொற்றுச் சம்பவங்கள்

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்திலும், நியூ சவுத் வேல்ஸ் (New South Wales) மாநிலத்திலும், இவ்வாண்டின் ஆக அதிகமான கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

விக்டோரியா மாநிலத்தில் 26 பேரும், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 124 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விக்டோரியா, நியூ சவுத் வேல்ஸ், சவுத் ஆஸ்திரேலியா (South Australia) ஆகிய மாநிலங்களில் அண்மையில் ஏற்பட்டுள்ள நோய்ப்பரவல் காரணமாக, ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன.

அதன் விளைவாகக், குயின்ஸ்லந்து, வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா (Western Australia) ஆகிய மாநிலங்களில் எல்லைக் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
 

Top