Images
  • australia covid (1)
    (கோப்புப் படம்: REUTERS/Sandra Sanders)

கிருமிப்பரவலை முன்னிட்டு உச்ச விழிப்புநிலையில் ஆஸ்திரேலியாவின் 2 மாநிலங்கள்

ஆஸ்திரேலிய அதிகாரிகள் கொரோனா கிருமிப்பரவலை முன்னிட்டு உச்ச விழிப்புநிலையில் உள்ளனர்.

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு தம்பதி விக்டோரியா (Victoria) மாநிலத்திலிருந்து குவீன்ஸ்லந்து (Queensland) மாநிலத்திற்குச் சென்றுள்ளதை அடுத்து அவர்கள் முன்னெச்சரிக்கையுடன் உள்ளனர்.

விக்டோரியாவைச் சேர்ந்த அந்தத் தம்பதி சென்றுவந்த வட்டாரங்களில் கிருமி பரவுவதற்கான அபாயம் அதிகம் என்று நியூ சவுத் வேல்ஸ் (New South Wales) மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.

விக்டோரியா மாநிலத்தில் நடப்பிலிருந்த இரண்டு வார முடக்கநிலை நாளையிலிருந்து தளர்த்தப்படவிருக்கிறது.

அண்மை நிலவரப்படி புதிதாக அங்கு மூவரிடம் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

நேற்றுப் புதிதாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பாதிக்கப்பட்டனர்.

கிருமி எவ்வாறு பரவியது என்பதை அதிகாரிகள் ஆராய்கின்றனர்.

-Reuters

Top