Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆஸ்திரேலியா: நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக 110 பேருக்குக் கிருமித்தொற்று

ஆஸ்திரேலியா: நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக 110 பேருக்குக் கிருமித்தொற்று

வாசிப்புநேரம் -
ஆஸ்திரேலியா: நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக 110 பேருக்குக் கிருமித்தொற்று

படம்: Reuters

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் (New South Wales) மாநிலத்தில் புதிதாக 110 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 43 பேர் சமூக அளவில் பாதிக்கப்பட்டவர்கள் என்றும், ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதிகரித்துவரும் நோய்ப்பரவல் சம்பவங்கள் குறித்து அனைவரும் பொறுமை காக்கும்படி அம்மாநில முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

கிருமித்தொற்றுப் பரிசோதனைகளை மேற்கொள்ள 84,000 பேர் முன்வந்ததைத் தொடர்ந்து அதிகமானோருக்கு நோய் உறுதியானதாக அவர் குறிப்பிட்டார்.

Greater Sydney வட்டாரத்தில் முடக்கநிலை அமல்படுத்தப்படவில்லை என்றால்,
தினசரி கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் பதிவாகியிருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.

அன்றாடச் சம்பவங்களின் எண்ணிக்கை பூஜ்யத்தை எட்டும் முன்பாகவே கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்