Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகருக்கு அருகே 3 முறை நிலநடுக்கம்

ஆஸ்திரேலியாவின் Melbourne நகருக்கு அருகே ஒரு மணி நேரத்திற்குள் 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

வாசிப்புநேரம் -

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகருக்கு அருகே ஒரு மணி நேரத்திற்குள் 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

அவற்றில் ஆக வலுவான நிலநடுக்கத்தின் அளவு 5.8 ரிக்டர்.

மான்ஸ்ஃபீல்ட் (Mansfield) நகருக்கு அருகே மையம் கொண்டிருந்த அது,
ஆஸ்திரேலிய நேரப்படி காலை சுமார் 9 மணிக்கு ஏற்பட்டது.

கட்டடங்கள் சேதமடைந்தன.

மெல்பர்ன், சிட்னி உள்ளிட்ட பகுதிகளில் அதிர்வுகள் உணரப்பட்டன.

சில குடியிருப்புக் கட்டடங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. 

-Agencies

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்