Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆஸ்திரேலியாவில் கருணைக் கொலைச் சட்டம் நடப்புக்கு வந்துள்ளது

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கருணைக் கொலை குறித்த சட்டம் நடப்புக்கு வந்துள்ளது.

வாசிப்புநேரம் -
ஆஸ்திரேலியாவில் கருணைக் கொலைச் சட்டம் நடப்புக்கு வந்துள்ளது

(கோப்புப்படம்: AFP)

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கருணைக் கொலை குறித்த சட்டம் நடப்புக்கு வந்துள்ளது.

பெரும்பாலான நாடுகளில் கருணைக் கொலை தடைசெய்யப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு அதனை ஏற்றுக்கொள்வதற்கான சட்டங்களை விக்டோரியா மாநிலம் அறிமுகப்படுத்தியது.

அது துணிச்சலான மாற்றம் என்று வர்ணிக்கப்படுகிறது.

கருணைக் கொலைக்கு அனுமதி பெற வேண்டுமெனில், கடும் நோய் கொண்ட மூத்தோராகவோ, உயிர் வாழும் காலம் ஆறு மாதத்துக்கும் குறைவாகவோ இருக்கவேண்டும் போன்ற சில நிபந்தனைகள் பின்பற்றப்பட வேண்டும்.

சில பாதுகாப்பு நடைமுறைகளும் அதற்காகச் செயல்படுத்தப்படவுள்ளன. தன்னிச்சை மறுஆய்வுக் குழுவினர், மரண விசாரணை நீதிபதி ஆகியோர் அனைத்து மரணச் சம்பவங்களின் விவரங்களையும் அணுக்கமாகக் கவனிப்பர் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டு சுமார் 12 பேருக்கு கருணைக் கொலைக்கான அனுமதி வழங்கப்படலாம் என்று கூறப்பட்டது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்