Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆஸ்திரேலியா: உள்நாட்டு விமானச் சேவை நிறுவனங்களுக்கான நிவாரணத் தொகுப்புத் திட்டம் 4 மாதங்களுக்கு நீட்டிப்பு

ஆஸ்திரேலிய அரசாங்கம், உள்நாட்டு விமானச் சேவை நிறுவனங்களுக்கான நிவாரணத் தொகுப்புத்திட்டத்தை அதன் வரவுசெலவுத் திட்டத்தில், மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிக்கவிருக்கிறது.

வாசிப்புநேரம் -

ஆஸ்திரேலிய அரசாங்கம், உள்நாட்டு விமானச் சேவை நிறுவனங்களுக்கான நிவாரணத் தொகுப்புத்திட்டத்தை அதன் வரவுசெலவுத் திட்டத்தில், மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிக்கவிருக்கிறது.

அந்த உதவி அடுத்த ஆண்டு ஜனவரி மாத இறுதி வரை தொடரும்.

கொரோனா நோய்ப் பரவல் சூழல், ஆஸ்திரேலிய உள்நாட்டு விமானத் துறையை எவ்வளவு காலம் பாதிக்கும் என்பது குறித்த நிச்சயமற்ற நிலையை அந்த முடிவு பிரதிபலிக்கிறது.

முன்னதாக, அந்தத் தொகுப்புத் திட்டம் இம்மாத இறுதியில் முடிவடையவிருந்தது.

விரிவாக்கம் காணவிருக்கும் தொகுப்புத் திட்டத்தின் மதிப்பு பற்றி தகவல் இல்லை.

கடந்த ஏப்ரல் மாதம் அந்தத் தொகுப்புத் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து, ஆஸ்திரேலிய அரசாங்கம், 106 மில்லியன் டாலருக்கும் அதிகமாக நிதி வழங்கியிருக்கிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்