Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரை மிரட்டும் காட்டுத்தீ

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரின் தெற்கே உள்ள சில புறநகர்ப் பகுதிகளில் காட்டுத்தீ பரவிக்கொண்டிருப்பதாக அந்நகரின் தீயணைப்பு, நெருக்கடிகாலப் பிரிவு தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரின் தெற்கே உள்ள சில புறநகர்ப் பகுதிகளில் காட்டுத்தீ பரவிக்கொண்டிருப்பதாக அந்நகரின் தீயணைப்பு, நெருக்கடிகாலப் பிரிவு தெரிவித்துள்ளது.

அந்தத் தீயினால் பலரும் தங்களது வீடுகளை இழக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. உயிரிழப்புகள் குறித்த கவலையும் எழுந்துள்ளது.

அதன் காரணமாக, குடியிருப்பாளர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

பல இடங்களில் தீயினால் புகைமூட்டமாக இருப்பதாகவும் தகவல் அளிக்கப்பட்டது. வானிலிருந்து எடுக்கப்பட்ட படங்களில் ஒரு சில விமானங்கள் தீப் பற்றிய இடங்களில் தண்ணீர்-குண்டுகளை வீசுவது பதிவாகியுள்ளது.

சில சாலைகள் மூடப்பட்டன; அவசர வெளியேற்றத்திற்கான நிலையங்களும் அமைக்கப்பட்டன.

தற்போது காற்று வேகமாக வீசிக்கொண்டிருப்பதால் தீயணைப்பாளர்களின் பணி மேலும் கடினமாகியுள்ளது. தற்போது அந்த வட்டாரத்தில் வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸுக்கு அதிகரித்துள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்