Images
  • australia police
    (படம்: REUTERS/Sonali Paul)

ஆஸ்திரேலியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடப்பதற்கான சாத்தியம் தொடர்ந்து உள்ளது : பிரதமர் மோரிசன்

ஆஸ்திரேலியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடப்பதற்கான சாத்தியம் தொடர்ந்து உள்ளதாக, அந்நாட்டு பிரதமர் ஸ்கோட் மோரிசன் கூறியிருக்கிறார்.

மெல்பர்ன் நகரில் கத்திக் குத்துத் தாக்குதல் சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து, அவர் அவ்வாறு சொன்னார்.

ஐ எஸ் பயங்கரவாத அமைப்பின் தூண்டுதலால் அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று ஆஸ்திரேலிய காவல்துறை நம்புகிறது.

ஆஸ்திரேலியா, 5 நிலைகளைக் கொண்ட பயங்கரவாத மிரட்டல் அளவு முறையைக் கொண்டுள்ளது.

பயங்கரவாதத் தாக்குதல் நடப்பதற்கான சாத்தியம் இருப்பதாகக் கூறப்படுவது, அந்த அளவு முறையில் பாதி நிலை.

அந்த அளவு முறை 2015ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

அப்போது இருந்தே, பயங்கரவாதத் தாக்குதல் நடப்பதற்கான சாத்தியம் உள்ள நிலையிலேயே அது இருந்துள்ளது. 

Top