Images
  • aus covid
    (கோப்புப் படம்: AFP/William West) 

ஆஸ்திரேலியாவில் தற்போதைக்கு முடக்கநிலை அறிவிக்கப்படாது

ஆஸ்திரேலியாவில் தற்போதைக்கு முடக்கநிலை அறிவிக்கப்படமாட்டாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பில் வந்தவர்களை அடையாளம் காணும் பணிகள் தொடர்வதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

பெர்த் நகரில் புதிதாக மூவருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் ஹோட்டலில் வேலை செய்த பாதுகாவலர்.

அவருடன் ஒரே வீட்டில் இருந்தவர்களும் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, தேவை ஏற்பட்டால் முடக்கநிலை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

குடியிருப்பாளர்கள் அனைவரும் கிருமித்தொற்றுப் பரிசோதனை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்படுகின்றனர். 

Top