Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மேலும் ஒரு மில்லியன் அளவு Moderna தடுப்பு மருந்தை வாங்கியிருக்கும் ஆஸ்திரேலியா

மேலும் ஒரு மில்லியன் அளவு Moderna தடுப்பு மருந்தை வாங்கியிருக்கும் ஆஸ்திரேலியா

வாசிப்புநேரம் -
மேலும் ஒரு மில்லியன் அளவு Moderna தடுப்பு மருந்தை வாங்கியிருக்கும் ஆஸ்திரேலியா

(படம்: AFP/GUILLAUME SOUVANT)

ஆஸ்திரேலியா, மேலும் ஒரு மில்லியன் முறை பயன்படுத்தத் தேவையான Moderna தடுப்பு மருந்தை ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து வாங்கியுள்ளதாகப் பிரதமர் ஸ்காட் மோரிசன் (Scott Morrison) தெரிவித்துள்ளார்.

அவை வரும் வாரம் ஆஸ்திரேலியா வந்தடையும் என்று அவர் கூறினார்.

அங்கு கிருமிப்பரவல் மோசமாகி வரும் வேளையில், COVID-19 தடுப்பூசி போடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலியா, ஏற்கனவே Moderna நிறுவனத்திடமிருந்து 25 மில்லியன் அளவு பயன்படுத்தத் தேவையான தடுப்பு மருந்துகளைப் பெற ஒப்பந்தம் செய்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 73,610.

மாண்டோர் எண்ணிக்கை 1,091.

ஐரோப்பிய ஒன்றியத்துடனான பரிவர்த்தனை, ஆஸ்திரேலியாவின் பொருளியலை மேம்படுத்த உதவும் என்று கூறப்படுகிறது.

2ஆவது பொருளியல் நெருக்கடி ஏற்படும் அபாயத்தை ஆஸ்திரேலியா எதிர்நோக்குகிறது.

-Reuters 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்