Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

எல்லையைத் திறப்பதில் அவசரம் இல்லை: ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா அதன் எல்லையை உலக நாடுகளுக்குத் திறந்து விடுவதில் அவசரம் காட்டாது என்று அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மோரிசன் (Scott Morrison) தெரிவித்துள்ளார். 

வாசிப்புநேரம் -
எல்லையைத் திறப்பதில் அவசரம் இல்லை: ஆஸ்திரேலியா

படம்: REUTERS

ஆஸ்திரேலியா அதன் எல்லையை உலக நாடுகளுக்குத் திறந்து விடுவதில் அவசரம் காட்டாது என்று அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மோரிசன் (Scott Morrison) தெரிவித்துள்ளார்.

தற்போது ஆஸ்திரேலியா கிட்டத்தட்ட பழையநிலைக்குத் திரும்பி வருவதாகவும் அதைச் சீர்குலைக்க விருப்பம் இல்லை என்றும் அவர் கூறினார்.

COVID-19 தடுப்பூசி போட்டுக் கொண்ட ஆஸ்திரேலியர்கள் அத்தியாவசிய வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வது, பின் நாடு திரும்பி தனிமைப்படுத்தப்படுவது ஆகியவை குறித்துத் திட்டமிடப்பட்டு வருவதாகத் திரு மோரிசன் சொன்னார்.

COVID-19 காரணமாக ஆஸ்திரேலியா அதன் எல்லையைச் சென்ற ஆண்டு மார்ச் மாதம் மூடியது.

நியூசிலந்து சுமார் ஓராண்டுக்குப் பின்,ஆஸ்திரேலியாவுடனான தனது எல்லைப் பகுதிகளை நாளை மீண்டும் அதிகாரபூர்வமாகத் திறக்கிறது.

பயணிகள், தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளாமல் அந்த இரு நாடுகளுக்கும் இடையே இருவழிப் பயணங்களை மேற்கொள்ளலாம்.

கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றியதால் ஆஸ்திரேலியாவில் நோய்ப்பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி ஆஸ்திரேலியாவில் சுமார் 29,500 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. 910 பேர் மாண்டனர்.

-Reuters
  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்