Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆஸ்திரேலியா: சமூக அளவில் முதல் Omicron கிருமித்தொற்று

ஆஸ்திரேலியாவில் சமூக அளவில் ஒருவருக்கு ஓமக்ரான் ரகக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

ஆஸ்திரேலியாவில் சமூக அளவில் ஒருவருக்கு ஓமக்ரான் ரகக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் பொருளியலை மீண்டும் திறக்கும் திட்டத்தைத் தொடரவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னதாகத் தலைதூக்கியுள்ள நோயப்பரவலைக் கையாள்வதைவிட இம்முறை சற்று எளிதாக இருக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

பாதிக்கப்பட்டவர், சிட்னி நகரத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அவர் வெளிநாடுகளுக்குச் செல்லவில்லை என்பதால் சமூக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நியூ சௌத் வேல்ஸ் (New South Wales) மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆஸ்திரேலியாவில் இதுவரை 9 பேருக்கு ஓமக்ரான் ரகக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டது.

அவர்களில் 8 பேர் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்