Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

வெளிநாடுகளுக்கு குப்பைகளை ஏற்றுமதி செய்வதை நிறுத்த ஆஸ்திரேலியா முடிவு

ஆஸ்திரேலியா, மறுசுழற்சி செய்யத் தகுதியுள்ள குப்பைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை நிறுத்த முடிவு செய்துள்ளது.

வாசிப்புநேரம் -
வெளிநாடுகளுக்கு குப்பைகளை ஏற்றுமதி செய்வதை நிறுத்த ஆஸ்திரேலியா முடிவு

படம்: AFP/Juni Kriswanto

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

ஆஸ்திரேலியா, மறுசுழற்சி செய்யத் தகுதியுள்ள குப்பைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை நிறுத்த முடிவு செய்துள்ளது.

உலகில் தற்போது அதிகரித்து வரும் பிளாஸ்டிக் தூய்மைக் கேட்டைக் குறைக்கவும், ஆசிய நாடுகள் குப்பைகளை இறக்குமதி செய்ய தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவருவதும் அந்த முடிவுக்குக் காரணம் என ஆஸ்திரேலியா குறிப்பிட்டது.

ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் அந்த முடிவை வரவேற்றுள்ளார்.

குப்பை ஏற்றுமதியைப் படிப்படியாக நிறுத்த ஒரு திட்டவட்டமான காலக்கெடுவைத் தயார் செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

பிளாஸ்டிக், கண்ணாடி, தாள்-ஆகியவை மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பைகள்.

ஆஸ்திரேலியா அதன் மொத்தக் குப்பையில் 12 விழுக்காட்டை மட்டுமே மறுசுழற்சிக்கு உட்படுத்துகிறது.

பசிஃபிக் கடலில் உள்ள குப்பைகளைக் குறைக்க ஆஸ்திரேலியா சுமார் 11 மில்லியன் டாலரை ஒதுக்க உறுதிகூறியுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்