Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தடைகளை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள்

தடைகளை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள்

வாசிப்புநேரம் -

ஜார்ஜ் ஃபுளோய்டின் (George Floyd) மரணம் தொடர்பாக, ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் தடைகளை மீறி ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

COVID-19 காரணமாக ஆஸ்திரேலியாவில் பொது இடங்களில் மக்கள் கூட்டமாக கூட அனுமதியில்லை.

அந்த விதியை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்திருந்தது.

ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் ஆஸ்திரேலியர்கள் ஐயாயிரத்துக்கும் அதிகமானோர் முகக்கவசங்களை அணிந்தவாறு "Black Lives Matter" என்ற பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உரிய அனுமதி இன்றி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தைக் கண்காணிக்க காவல்துறை அதிகாரிகளும் குவிக்கப்பட்டனர்.

ஆஸ்திரேலியாவின் வேறு சில நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.

அமெரிக்காவில் கறுப்பின ஆடவர் கொல்லப்பட்டதன் தொடர்பில், உலகின் பல நகரங்களில் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்