Images
  • aus
    (கோப்புப்படம்: REUTERS/Sandra Sanders)

ஆஸ்திரேலியாவின் சில மாநிலங்களில் திட்டமிட்டதைவிட முன்கூட்டியே கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம்...

ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ், விக்டோரியா ஆகிய மாநிலங்களில் கோவிட்-19 கட்டுப்பாடுகள் திட்டமிடப்பட்டதைவிட முன்கூட்டியே தளர்த்தப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தடுப்பூசி போட்டுக்கொள்வோர் விகிதம் அங்கு கணிசமாக உயர்ந்து வருவதே அதற்குக் காரணம்.

திட்டமிடப்பட்டதற்கு 4 நாள் முன்னரே விக்டோரியா மாநிலத்தில் 70 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டிருப்பர் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

இதற்குமுன் இம்மாதம் 26ஆம் தேதிக்குள் 70 விழுக்காட்டினருக்கு முழுமையாகத் தடுப்பூசி போடவேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அடுத்த மாதம் 5ஆம் தேதிக்குள் 80 விழுக்காட்டை எட்டுவது நோக்கம்.

தற்போது விக்டோரியா மாநிலத்தில் உள்ளோரில் 60 விழுக்காட்டினர் மட்டுமே முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

இதே போக்கு தொடர்ந்தால் இம்மாதம் 26ஆம் தேதிக்கு முன்னரே மெல்பர்ன் நகரில் முடக்கநிலை மீட்டுகொள்ளப்படலாம்.

அவ்வாறு நேர்ந்தால், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் கடைகளுக்குச் செல்லவும் உணவகங்களில் அமர்ந்து உண்ணவும் அனுமதிக்கப்படுவர்.  

Top