Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆஸ்திரேலியா: வாகன உரிமப் பட்டையில் emoji

ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லந்து(Queensland) மாநிலத்தில் வாகனமோட்டிகள் தங்களுக்கு விருப்பமான இமோஜிகளைத் (emoji) தங்கள் வாகன உரிமப் பட்டையில் இனி சேர்த்துக்கொள்ளலாம்.

வாசிப்புநேரம் -
ஆஸ்திரேலியா: வாகன உரிமப் பட்டையில் emoji

படம்: Facebook/PersonalisedPlatesQueensland

ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லந்து(Queensland) மாநிலத்தில் வாகனமோட்டிகள் தங்களுக்கு விருப்பமான இமோஜிகளைத் (emoji) தங்கள் வாகன உரிமப் பட்டையில் இனி சேர்த்துக்கொள்ளலாம்.

பல வகையான இமோஜிகள் உள்ளன. அவற்றில் சிலவற்றைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி உண்டு.

தங்களுக்கு விருப்பமானவற்றை வாகன உரிமையாளர்கள் வாகனத்தில் இடம்பெறச் செய்யலாம்.

அவ்வாறு இமோஜிகளை வாகன உரிமப் பட்டையில் சேர்த்துக்கொள்ள 500 வெள்ளி வரை செலவாகலாம்.

அதிகச் செலவு என்பதால் சிலருக்கு அதில் முற்றிலும் ஆர்வம் இல்லை.

ஆனால் விலையைப் பற்றி கவலைப்படவில்லை மற்ற சிலர்.

இமோஜிகளைக் கொண்ட வாகன உரிமப் பட்டையைப் பார்ப்பவர்களின் முகத்தில் புன்னகை பூப்பது தங்களுக்கு மகிழ்ச்சி தருவதாகச் சில வாகனமோட்டிகள் கூறுகின்றனர்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்