Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் கிருமிப்பரவல்; குவீன்ஸ்லந்து மாநிலத்தில் முடக்கம்?

ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லந்து மாநிலத்தில் திடீர் முடக்கநிலை அறிவிக்கப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் கிருமிப்பரவல்; குவீன்ஸ்லந்து மாநிலத்தில் முடக்கம்?

(கோப்புப் படம்: AFP/Patrick Hamilton)

ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லந்து மாநிலத்தில் திடீர் முடக்கநிலை அறிவிக்கப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் அங்குப் புதிதாக 5 பேரிடம் தொற்று அடையாளங்காணப்பட்டுள்ளது.

அடுத்து வரும் நாள்களைத் தீவிரமாகக் கண்காணித்து, முடக்கநிலை குறித்து முடிவெடுக்கவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆஸ்திரேலியாவில் இன்று புதிதாகக் குறைந்தது 2,054 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது.

முந்திய நாளுடன் ஒப்பிடுகையில் 151 பேர் அதிகம்.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மேலும் சுமார் 1,600 பேரிடம் நோய்த்தொற்று உறுதியானது.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாத நால்வர் மாண்டனர்.

கிருமித்தொற்றால் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள பெரும்பாலோர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் என்று அதிகாரிகள் கூறினர்.

விக்டோரியா மாநிலத்தில் இன்று 450 பேருக்குத் தொற்று உறுதியானது.

கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பிறகு பதிவான ஆக அதிகமான தினசரி எண்ணிக்கை அது.

ஆஸ்திரேலியாவில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 73,000.

1,084 பேர் மாண்டனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்