Images
  • stabbing
    படம்: AAP/James Ross/via REUTERS

கத்தியைச் சுழற்றி மெல்பர்ன் நகர வீதியில் தாக்குதல் நடத்திய ஆடவர்

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் கூட்ட நெரிசல் மிகுந்த இடத்தில் கத்திக் குத்துத் தாக்குதல் நடத்திய ஆடவர் சுடப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

தாக்குதலில் ஒருவர் பலியானதாகவும் சிலருக்குக் காயம் ஏற்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.

சம்பவத்தைக் காட்டும் காணொளியில், ஆடவர் ஒருவர் கூட்டத்துக்குள் புகுந்து, இரு காவல் அதிகாரிகளுக்கு எதிரில் கத்தியை சுழற்றுகிறார். பின் அவர்களைத் தாக்கத் தொடங்குகிறார்.

உடனே, அதிகாரி ஒருவர் துப்பாக்கியை எடுத்து அந்த ஆடவரைச் சுடுவதையும், அவர் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு விழுவதையும் காணொளி காட்டுகிறது. 

சுடப்பட்ட ஆடவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

முதலில் கார் ஒன்று தீப்பிடித்து எரிவதாகத் தகவல் வந்ததாகவும், பின் கத்திக்குத்துத் தாக்குதல் நடந்ததைத் தொடர்ந்து, அந்த இடம்  மூடப்பட்டதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

சம்பவத்துக்குப் பயங்கரவாதத் தொடர்பு இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


Top