Images
  • sydney
    (படம்: AFP/Bianca De Marchi)

சிட்னியில் மேலும் குறைந்து வரும் கிருமித்தொற்றுச் சம்பவங்கள்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத் தலைநகர் சிட்னியில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் மேலும் குறைந்துள்ளன.

அங்கு நேற்று, கடந்த 2 மாதங்களில் காணாத அளவில், குறைவான கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாயின. சிட்னியில் கடந்த 24 மணி நேரத்தில் 360 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இந்நிலையில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள பெரியவர்களில் 70 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். அதனால், அங்கு, மதுக்கூடங்கள், உணவகங்கள், கடைகள் எனப் பல பொது இடங்கள் மக்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.  

Top