Images
  • Cannabis
    படம்: REUTERS

ஆஸ்திரேலியா: கஞ்சாவின் மருத்துவப் பயன்பாடு பற்றி ஆய்வுசெய்ய 2 மில்லியன் டாலர் ஒதுக்கீடு

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

ஆஸ்திரேலியா, கஞ்சாவின் மருத்துவப் பயன்பாடு பற்றி ஆய்வுசெய்ய சுமார் 2 மில்லியன் டாலரை ஒதுக்கியுள்ளது. புற்றுநோய் நோயாளிகள் அந்த ஆய்வின்மூலம் பயனடைவர் என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சர் கிரெக் ஹண்ட் தெரிவித்துள்ளார். கஞ்சாவின் மருத்துவ பயன்பாட்டிற்கான தேவை அங்கு அதிகரித்து வருகிறது.

ஆஸ்திரேலியாவில் கஞ்சாவை மருத்துவப் பயன்பாட்டிற்காக வளர்க்க உரிமம் தேவை. மருத்துவரின் அனுமதிக்குப் பிறகே  நோயாளிக்குக் கஞ்சா வழங்கப்படுகிறது. இதுவரை அதன்மூலம் 11,000க்கும் அதிகமான நோயாளிகள் பயன்பெற்றுள்ளனர்.

மருத்துவப் பயன்பாட்டிற்காக கஞ்சாவைப் பயிரிடவும், அறுவடை செய்யவும் தற்போது 78 நிறுவனங்கள் உரிமம் பெற்றுள்ளன. 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம், ஒரே ஒரு நிறுவனமே அத்தகைய உரிமத்தைப் பெற்றிருந்தது.


Top