Images
  • carbon emission
    (படம்: Pixabay)

ஆஸ்திரேலியா: 2030-ஆம் ஆண்டுக்குள் கரியமிலவாயு வெளியேற்றத்தைப் பாதியாகக் குறைக்க விக்டோரியா மாநிலம் உறுதி

ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய மாநிலமான விக்டோரியா, 2030-ஆம் ஆண்டுக்குள் கரியமிலவாயு வெளியேற்றத்தைப் பாதியாகக் குறைக்க உறுதி தெரிவித்துள்ளது.

அப்போது தனது கரியமிலவாயு வெளியேற்றம், சுமார் 15 ஆண்டுக்கு முன் இருந்த அளவில் பாதியாக இருக்கும் என அது எதிர்பார்க்கிறது.

பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற அனைத்து அரசாங்க வளாகங்களிலும், அடுத்த 4 ஆண்டுக்குள், புதுப்பிக்கக்கூடிய எரிசக்தியைப் பயன்படுத்த விக்டோரியா மாநிலம் இலக்கு கொண்டிருக்கிறது.

தனிநபர் அடிப்படையில், உலகிலேயே ஆக அதிக கரியமிலவாயுவை வெளியேற்றும் நாடு, ஆஸ்திரேலியா.

கரியமிலவாயு வெளியேற்றத்தைக் குறைக்க அமெரிக்காவும், மற்ற சில நாடுகளும், அனைத்துலகப் பருவநிலை மாநாடு ஒன்றில் புதிய இலக்குகளை முன்வைத்தன.

அவற்றை ஆஸ்திரேலியாவின் மத்திய அரசாங்கம் நிறைவேற்றத் தவறிவிட்டது.

அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா கடும் நெருக்குதலை எதிர்நோக்குகிறது.

Top