Images
  • australia covid
    (கோப்புப் படம்: REUTERS/Sandra Sanders)

COVID-19: முகக்கவசத்தை அணியுங்கள்! - ஆஸ்திரேலியாவின் மோசமாகப் பாதிக்கப்பட்ட இடங்களில் வலியுறுத்தல்

ஆஸ்திரேலியாவில் கிருமிப்பரவல் காரணமாக மிக மோசமாய்ப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முகக்கவசங்கள் அணிவதை நோய்க் கட்டுப்பாட்டு அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

விக்டோரியா மாநிலத்தில் நேற்று 630 புதிய நோய்ச் சம்பவங்கள் பதிவாயின.

 8 பேர் மாண்டனர்.

இதுவரை ஆஸ்திரேலியாவில் நோய்ப்பரவல் காரணமாக நேர்ந்த மரணங்களின் எண்ணிக்கையில் பாதி, விக்டோரியா மாநிலத்தில் பதிவாயின.

இந்நிலையில், அந்த மாநிலத்தின் தலைநகரான மெல்பர்னில் 6-வார முடக்கநிலை மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Top