Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆஸ்திரேலியாவில் 2ஆம் மாதமாக அதிகரித்துள்ள வேலையின்மை விகிதம்

ஆஸ்திரேலியாவில் சென்ற மாதம், வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளது.

வாசிப்புநேரம் -
ஆஸ்திரேலியாவில் 2ஆம் மாதமாக அதிகரித்துள்ள வேலையின்மை விகிதம்

படம்: REUTERS

ஆஸ்திரேலியாவில் சென்ற மாதம், வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளது.

அங்கு, சென்ற மாதம், வேலையின்மை விகிதம் 4.6 விழுக்காட்டுக்கு உயர்ந்ததாக ஆஸ்திரேலியப் புள்ளிவிவரத் துறை தெரிவித்தது. அதற்கு முந்திய மாதம் அது 4.5 விழுக்காடாக இருந்தது.

அங்கு, தொடர்ச்சியாக, இரு மாதங்களுக்கு வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளதாகத் துறை குறிப்பிட்டது.

ஆஸ்திரேலியாவில் கிருமிப்பரவல் சூழலில் நடைமுறைப்படுத்தப்பட்ட முடக்கநிலையால் வர்த்தகங்கள், அதிகமான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது.

அங்கு, வேலை தேடுவோர் எண்ணிக்கையும் குறைந்துள்ளதால் வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்