Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மலையிலிருந்து பாய்வது ஒரு விளையாட்டா?

ஆஸ்திரேலியாவில் சாகச விளையாட்டு விரும்பிகள் பலர் கயிற்றைக் கட்டிக்கொண்டு மலையிலிருந்து பாய்வதை விளையாட்டாகக் கருதி அதில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாசிப்புநேரம் -
மலையிலிருந்து பாய்வது ஒரு விளையாட்டா?

(படம்: Reuters/ Loren Elliott)

ஆஸ்திரேலியாவில் சாகச விளையாட்டு விரும்பிகள் பலர் கயிற்றைக் கட்டிக்கொண்டு மலையிலிருந்து பாய்வதை விளையாட்டாகக் கருதி அதில் ஈடுபட்டு வருகின்றனர்.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் கராரொங் (Currarong) நகரில் 60 மீட்டர் உயர மலை உள்ளது. அதன் உச்சியிலிருந்து பலரும் கடலின் மேல் பாய்வதைக் காட்சியாகக் காணலாம்.

அவர்களின் உடலில் கயிறு ஒன்றைக் கட்டி இரு மலைகளுக்கிடையில் அந்தக் கயிற்றை இணைப்பர். அதன் பின், அவர்கள் பாய்வர்.

இந்த விளையாட்டு 1990களில் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த பத்து ஆண்டுகளில் அது பிரபலமடைந்துள்ளது.

Bungee jumping என்ற இன்னொரு சாகச விளையாட்டைப் போலவே காட்சியளிக்கும் இந்த விளையாட்டு சற்று மாறுபட்டது.

Bungee jumping விளையாட்டில் பாய்வதற்கென ஏற்கெனவே ஒரு கட்டமைப்பு பொருத்தப்பட்டிருக்கும்.

இந்த விளையாட்டில், மலையிலிருந்தோ உயர்ந்த கட்டடங்களிலிருந்தோ பாய்பவர்கள் கயிற்றைச் சொந்தமாகவே அந்தந்த இடங்களில் இணைக்கவேண்டுமாம்! 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்