Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆஸ்திரேலியா: நாடாளுமன்ற கணினிக் கட்டமைப்பு ஊடுருவல்

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் கணினிக் கட்டமைப்பு ஊடுருவப்பட்டுள்ளது. அந்தப் பாதுகாப்பு அத்துமீறல் சம்பவம் குறித்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

வாசிப்புநேரம் -
ஆஸ்திரேலியா: நாடாளுமன்ற கணினிக் கட்டமைப்பு ஊடுருவல்

படம்: AFP/PAUL FAITH

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் கணினிக் கட்டமைப்பு ஊடுருவப்பட்டுள்ளது. அந்தப் பாதுகாப்பு அத்துமீறல் சம்பவம் குறித்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கணினிக் கட்டமைப்பைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.

என்ன விதமான இணையப் பாதுகாப்பு அத்துமீறல் நிகழ்ந்தது என்பதைத் தெரிவிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

நாடாளுமன்ற, அரசியல் நடைமுறைகளைப் பாதிக்கும் முயற்சியாக ஊடுருவல் சம்பவம் இருக்கக்கூடும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தகவல்களையும் பயனீட்டாளர்களையும் பாதுகாப்பது முதன்மை நோக்கம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

நாடாளுமன்றக் கடவுச்சொற்கள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளன. ஆஸ்திரேலிய இணையப் பாதுகாப்பு நிலையம் சம்பவம் குறித்து விசாரித்து வருகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்