Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மாநிலங்களுக்கு இடையிலான எல்லைகள் திறக்கப்படும்போது புதிய வேலைகள் உருவாகும்; ஆஸ்திரேலியப் பிரதமர்

ஆஸ்திரேலியாவில் மாநிலங்களுக்கு இடையிலான எல்லைகள் திறக்கப்படும்போது வேலை வாய்ப்புகள் பெருகும் என்று அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மோரிசன் (Scott Morrison) தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
மாநிலங்களுக்கு இடையிலான எல்லைகள் திறக்கப்படும்போது புதிய வேலைகள் உருவாகும்; ஆஸ்திரேலியப் பிரதமர்

(படம்: REUTERS/Loren Elliott)

ஆஸ்திரேலியாவில் மாநிலங்களுக்கு இடையிலான எல்லைகள் திறக்கப்படும்போது வேலை வாய்ப்புகள் பெருகும் என்று அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மோரிசன் (Scott Morrison) தெரிவித்துள்ளார்.

சௌத் ஆஸ்திரேலியா, டாஸ்மேனியா ஆகிய மாநிலங்கள் அடுத்தமாத இறுதியில் தங்களது எல்லைகள் திறக்கப்படுவதை உறுதிப்படுத்தியுள்ளன.

குவீன்ஸ்லந்து (Queensland) மாநிலமும் விரைவில் அதுபோன்ற அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில், ஆஸ்திரேலியா ஓரளவு வெற்றி கண்டுள்ளது.

இருப்பினும், விக்டோரியா மாநிலத்தில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அண்மையில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கின.

எனவே, நாடெங்கும் நடப்பிலுள்ள பாதுகாப்பு இடைவெளிக் கட்டுப்பாடுகளில் பலவற்றை மீட்டுக்கொள்வது குறித்துக் கவலை உருவாகியுள்ளது.

அங்கு நோய்த்தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை சுமார் 7,700.

104 பேர் கொரோனா கிருமித்தொற்றால் மாண்டனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்