Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

Marvel கதாபாத்திரங்களின் பெயர் சூட்டப்பட்ட ஈக்கள்

ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் சிலர், புதிய ஈ வகைகளுக்கு Marvel கதாபாத்திரங்களின் பெயர்களைச் சூட்டியுள்ளனர்.

வாசிப்புநேரம் -

ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் சிலர், புதிய ஈ வகைகளுக்கு Marvel கதாபாத்திரங்களின் பெயர்களைச் சூட்டியுள்ளனர்.

கதாபாத்திரங்களை உருவாக்கிய Stan Leeஇன் பெயரிலும் ஈக்கள் தற்போது உள்ளன.

Thor எனப்படும் கதாபாத்திரத்தின் பெயரால் 'Daptolestes bronteflavus' என்ற ஒரு வகை ஈ அழைக்கப்படுகிறது. லத்தீன் மொழியில் 'வெண்மையான முடியைக் கொண்ட இடி' என்பது அதன் அர்த்தம். கதாபாத்திரத்தின் முடி நிறத்தையும், இடியைக் கட்டுப்படுத்தும் ஆற்றலையும் கருத்தில் கொண்டு பெயர் வைக்கப்பட்டது.

Deadpool எனப்படும் ஈ வகை, அந்தக் கதாபாத்திரத்தின் சிவப்பு, கறுப்பு உடையின் நிறங்களை அதன் உடலில் கொண்டுள்ளது.

உலகின் பல சவால்களைத் தீர்ப்பதில் பூச்சி வகைகள் அதீத சக்திகளைக் கொண்டுள்ளதால் அவ்வாறு பெயர் சூட்டப்பட்டதாய்க் கூறினர் ஆய்வாளர்கள்.

ஆஸ்திரேலியாவில் கால் பங்கு பூச்சி வகைகள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுக்குப் பெயர் சூட்டுவதால் அவற்றின் ஆற்றல்களையும் எளிதில் அறிய முடியும் என்றனர் ஆய்வாளர்கள்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்