Images
  • crime (1)

36 ஆண்டுக்கு முன் காணாமல் போன பெண் - கணவர் மீது கொலைக் குற்றச்சாட்டு

ஆஸ்திரேலியப் பெண் காணாமல் போனதன் தொடர்பில் அவருடைய கணவர் மீது 36 ஆண்டுகளுக்குப் பிறகு கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

1982ஆம் ஆண்டு கொலை நடந்த பிறகு கிறிஸ் டாவ்ஸன் தலைமறைவானார். 

குற்றப் புலனாய்வு தொடர்பான ஒரு நிகழ்ச்சியின் மூலம் 70 வயது டாவ்ஸன் பற்றிய தகவல் வெளியே தெரியவந்தது. 

அதனைத் தொடர்ந்து அவர் குவீன்ஸ்லந்திலிருந்து சிட்னிக்குத் திருப்பியனுப்பப்பட்டார். 

டாவ்ஸன், தமது இரண்டு குழந்தைகளின் தாயான லினட் டாவ்ஸனைத் தாம் கொல்லவில்லை என்று முன்னர் கூறியிருந்தார்.

சமயக் குழுவில் சேருவதற்காக லினட் குடும்பத்தைத் தனியே விட்டுவிட்டுச் சென்றதாகவும் அவர் சொன்னார். 

ஆஸ்திரேலியப் பத்திரிகையின் இணையப்பதிவு ஒலிபரப்பு, டாவ்ஸன் வழக்கை உலகின் கவனத்துக்குக் கொண்டு வந்தது. மே மாதத்தில் தொடங்கப்பட்ட அந்த ஒலிபரப்பு 27 மில்லியன் நேயர்களை ஈர்த்துள்ளது. 

மூன்றாண்டுகளுக்கு முன்னர், கொலை தொடர்பான புலனாய்வு மீண்டும் தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து உயர்நிலைப் பள்ளி ஆசிரியரான டாவ்ஸன் கைது செய்யப்பட்டார். 

இணையக் காணொளி மூலம் டாவ்ஸன் சிட்னி மத்திய நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். அங்கு அவருக்குப் பிணை மறுக்கப்பட்டது.

பின்னொரு நாளில் முறையாக பிணை கோரி விண்ணப்பிக்கப்படும் என்று அவருடைய வழக்குரைஞர் கூறினார். 

திருமதி டாவ்ஸன் சிட்னியில் உள்ள தம் வீட்டிலிருந்து 36 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போனார். இதுவரை அவரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. அவருடைய சடலமும் கண்டுபிடிக்கப்படவில்லை.  

Top