Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தாய்லந்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பஹ்ரேன் விளையாட்டாளரை விடுவிக்குமாறு கோரிக்கை

தாய்லந்திலுள்ள குகையில் காணாமல் போன 12 பள்ளி மாணவர்களையும், காற்பந்துப் பயிற்றுவிப்பாளரையும் தேடி மீட்க உதவிய இரண்டு ஆஸ்திரேலிய முக்குளிப்பாளர்கள் தாய்லந்துப் பிரதமரிடம் எழுத்து வடிவில்  ஓர் உதவி கோரியுள்ளனர்.

வாசிப்புநேரம் -
தாய்லந்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பஹ்ரேன் விளையாட்டாளரை விடுவிக்குமாறு கோரிக்கை

படம்: REUTERS/Athit Perawongmetha

தாய்லந்திலுள்ள குகையில் காணாமல் போன 12 பள்ளி மாணவர்களையும், காற்பந்துப் பயிற்றுவிப்பாளரையும் தேடி மீட்க உதவிய இரண்டு ஆஸ்திரேலிய முக்குளிப்பாளர்கள் தாய்லந்துப் பிரதமரிடம் எழுத்து வடிவில்  ஓர் உதவி கோரியுள்ளனர்.

தாய்லந்தில் தற்போது தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பஹ்ரேன் காற்பந்து விளையாட்டாளரை ஆஸ்திரேலிய அகதித் தகுதியுடன் விடுவிக்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

25 வயது ஹக்கீம் அல் அரபியின் வழக்கு அனைத்துலக அளவில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

ஹக்கீமுக்கு, பஹ்ரேன் பத்தாண்டுச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

அந்த வழக்கு 2011ஆம் ஆண்டு அரபுப் புரட்சி ஆர்ப்பாட்டங்களுடன் தொடர்புடையது.

தாம் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளை ஹக்கீம் மறுத்து வருகிறார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தேனிலவுக்காக பேங்காக் சென்றிருந்த ஹக்கீமைத் தாய்லந்து அதிகாரிகள் தடுத்துவைத்தனர்.

ஆஸ்திரேலிய முக்குளிப்பாளர்கள் ரிச்சர்ட் ஹாரிஸ், கிரேய்க் சல்லன் இருவரும் ஹக்கீமை விடுவிக்கச் செய்வதற்கான கூட்டு இயக்கத்தைத் தொடங்கியுள்ளனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்