Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆஸ்திரியா, பெல்ஜியம் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்குக் கொரோனா கிருமித்தொற்று

ஆஸ்திரியா, பெல்ஜியம் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்குக் கொரோனா கிருமித்தொற்று

வாசிப்புநேரம் -

ஆஸ்திரியா, பெல்ஜியம் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் இதர வெளியுறவு அமைச்சர்களுடன் நடைபெற்ற அண்மைய கூட்டத்திற்கு பிறகு அமைச்சர்கள் இருவரும் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

அதன் காரணமாக,லக்சம்பர்கில் நடைபெற்ற ஒன்றுகூடலில் கொரோனா கிருமி அதிக அளவில் பரவியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையே நடைபெற்ற கூட்டத்தின்போது ஆஸ்திரிய வெளியுறவு அமைச்சர் ஷலான்பெர்க்கும் (Schallenberg), பெல்ஜிய வெளியுறவு அமைச்சர் சோஃபி வில்லியமும் (Sophie William) அருகருகே அமர்ந்திருந்தனர்.

திரு. ஷலான்பெர்க் ஏற்கனவே கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று ஆஸ்திரிய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.

வழக்கமான பரிசோதனைகளைச் செய்துகொண்ட அவரிடம் கூட்டத்திற்கு முன்னர் கிருமித்தொற்றுக்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்