Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அடுத்தடுத்த 'Avatar' திரைப்படத் தொடர்கள்?

அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு 2009ல் திரையிடப்பட்ட ஜேம்ஸ் கேமரனின் மாபெரும் படைப்பு 'Avatar' ஹாலிவுட் திரைப்படம்.

வாசிப்புநேரம் -
அடுத்தடுத்த 'Avatar' திரைப்படத் தொடர்கள்?

(படம்: REUTERS/Fred Prouser/File Photo)

அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு 2009ல் திரையிடப்பட்ட ஜேம்ஸ் கேமரனின் (James Cameron) மாபெரும் படைப்பு 'Avatar' ஹாலிவுட் திரைப்படம்.

உயிரோவியப் படமான அதையொட்டிய மேலும் நான்கு தொடர்களைத் தயாரிக்க முடிவு செய்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

அதற்கான முயற்சிகளை எடுத்து வருவதாகக் கேமரன் கூறினார்.

'Avatar' படத்தின் இரண்டாம், மூன்றாம் தொடர்களைத் தற்போது தயாரித்து வரும் அவர் படத்தயாரிப்பில் இதுவரை சுமார் 100 நாட்கள் கடந்திருப்பதாகத் தெரிவித்தார்.

இவ்விரு தொடர்களும் திரையிடப்பட்டு வெற்றியடைந்தால், அடுத்ததாக நான்காம், ஐந்தாம் படங்களைத் தயாரிப்பது அவரது திட்டம்.

அவற்றுக்கான திரைக்கதையை எழுதிவிட்டதாகக் கேமரன் குறிப்பிட்டார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்