Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அவக்காடோ பற்றாக்குறையினால் திருட்டு முயற்சிகளில் ஈடுபடும் பழப் பிரியர்கள்

சிற்றுண்டிகளில் பிரபலமாகப் பயன்படுத்தப்படும் அவக்காடோ பழங்களின் பற்றாக்குறையினால் சட்டத்தை மீறத் துணிந்துள்ளனர் பழப் பிரியர்கள் சிலர்.

வாசிப்புநேரம் -

வெல்லிங்டன்: சிற்றுண்டிகளில் பிரபலமாகப் பயன்படுத்தப்படும் அவக்காடோ பழங்களின் பற்றாக்குறையினால் சட்டத்தை மீறத் துணிந்துள்ளனர் பழப் பிரியர்கள் சிலர்.

தோட்டங்களில் விளையும் அவக்காடோ பழங்களைத் திருடும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஈராண்டுகளின் குறைவான விளைச்சல் காரணமாக பழங்களின் விலை 37 விழுக்காடு அதிகரித்துள்ளது.

உயிரியல் தொடர்பான கடுமையான பாதுகாப்புச் சட்டங்களால் நியூஸிலந்து மற்ற நாடுகளிலிருந்து அவக்காடோ பழங்களை இறக்குமதி செய்வதில்லை.

பற்றாக்குறையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த விரும்பும் சிலர் அவற்றைத் திருடி விற்பனை செய்வதாக நம்பப்படுகிறது.

போர்வைகளில் சுமார் 4,300 டாலர் மதிப்புள்ள அவக்காடோ பழங்களை இருவர் திருடிச் செல்ல முயன்றதாகப் பண்ணை உரிமையாளர் ஒருவர் கூறினார்.

சிலரோ திட்டமிட்டு பழங்களை யாருக்கும் தெரியாத வகையில் திருடுவதாகத் தெரியவந்துள்ளது.

சில பண்ணைகளில் 70 விழுக்காட்டு விளைச்சல் திருடப்பட்டுள்ளது. திருடர்களைக் கண்டுபிடிக்க சில வாரங்கள் எடுப்பதால் அவர்களைக் கண்டுபிடிக்கும் போது பழங்கள் விற்று முடிந்துவிடுகின்றன.

திருடர்களைத் தடுக்கும் நோக்கில் பண்ணையாளர்கள் தோட்டங்களைச் சுற்றிக் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தியுள்ளனர். சிலர் அதையும் தாண்டி மரங்களைச் சுற்றிக் கூர்மையான கம்பிகளைப் பொருத்தியுள்ளனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்