Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

AstraZeneca தடுப்பூசியின் மிக அரிதான பக்கவிளைவாக ரத்தக் கட்டிகள் ஏற்படக்கூடும்: ஐரோப்பிய மருந்துகள் ஆணையம்

AstraZeneca தடுப்பூசியின் மிக அரிதான பக்கவிளைவாக ரத்தக் கட்டிகள் ஏற்படக்கூடும் என்று ஐரோப்பிய மருந்துகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

AstraZeneca தடுப்பூசியின் மிக அரிதான பக்கவிளைவாக ரத்தக் கட்டிகள் ஏற்படக்கூடும் என்று ஐரோப்பிய மருந்துகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

அத்தகைய சம்பவங்களில் பெரும்பகுதி 60 வயதிற்குக் கீழ் உள்ள பெண்களிடம் கண்டறியப்பட்டன.

மூளையில் ஏற்படும் ரத்தக் கட்டிகளுக்கும் AstraZeneca தடுப்பூசிக்கும் எந்த அளவிற்குத் தொடர்பு உள்ளது என்பது குறித்து வல்லுநர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

இருப்பினும், தடுப்பூசியின் அபாயங்களை விட நன்மைகள் அதிகம் என்று ஆணையம் வலியுறுத்துகிறது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பொதுவான மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையத்தைக் கொண்டிருந்தாலும் AstraZeneca தடுப்பூசி தொடர்பில் அவற்றுக்கிடையே கருத்திணக்கம் ஏற்படவில்லை.

இத்தாலியும் ஸ்பெயினும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே AstraZeneca தடுப்புமருந்தைப் போடவுள்ளன.

சில ஐரோப்பிய நாடுகள், வெவ்வேறு தடுப்பூசிகளைக் கலக்கத் திட்டமிடுகின்றன.

உதாரணத்திற்கு ஜெர்மனி, முதலில் AstraZeneca தடுப்பூசியைப் போட்ட பிறகு, இரண்டாவது முறை வேறு நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியைப் போட பரிந்துரைத்துள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்