Images
  • babies better hospital care (1)
    (படம்: RitaE/Pixabay)

நன்றியுணர்வை வெளிப்படுத்தினால் குழந்தைகளுக்கு அதிக கவனிப்பு கிடைக்கும்

பெற்றோர் மருத்துவர்களிடமும் தாதியர்களிடமும் அவர்களின் சேவைக்கு நன்றி கூறினால் மோசமான நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு இன்னும் சிறந்த கவனிப்பு கிடைக்கும் என்று ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

குடும்பத்தினரின் நன்றியுணர்வை வெளிப்படுத்தும் சிறு செயல்கள் கூட நோயாளியின் பாதுகாப்பை அதிகரிக்கும் என்று இஸ்ரேலிலுள்ள Bnai Zion மருத்துவ நிலையத்தின் ஆய்வாளர் கூறினார்.

ஆய்வில் தீவிர சிகிச்சை பிரிவில் பணிபுரியும் 43 குழுக்கள் பங்கேற்றன. ஒவ்வொரு குழுவிலும் 2 மருத்துவர்கள், 2 தாதியர்கள் பங்கேற்றனர். தாய் வெளிப்படுத்தும் நன்றியுணர்வே குழுவின் செயல்திறனை அதிகரிக்கிறது என்று ஆய்வு காட்டியது.

நன்றியுணர்வை வெளிப்படுத்தும் செயல்கள் நல்ல உணர்ச்சிகளுடன் தொடர்புடைய மூளைப் பகுதியைத் தூண்டிவிடும். அதனால் குழுவிடையே பிணைப்பும் உறவும் மேம்படும் என்று பால்டிமோரிலுள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராகப் பணிபுரியும் Cynda Rushton தெரிவித்தார்.


   

Top