Images
  • Home
    (படம் :Google Street View)

அமெரிக்கா: முன்னாள் ஈமச்சடங்கு இல்லத்தில் 11 குழந்தைகளின் சடலங்கள் கண்டுபிடிப்பு

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்திலுள்ள ஒரு நகரில் முன்னாள் ஈமச்சடங்கு இல்லத்தில் 11 குழந்தைகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

காவல் துறை அதிகாரிகள் அதனைத் தெரிவித்தனர்.

அடையாளம் குறிப்பிடப்படாமல் வந்த கடித்தில் இருந்த தகவல் மூலம் அந்த இல்லத்தை அதிகாரிகள் சோதனை செய்தனர்

சோதனையின்போது ஒரு பெட்டியில் 9 சடலங்கள் மோசமாக அழுகிய நிலையில் இருந்தன.

அவற்றுள் சில இறந்து பிறந்த குழந்தைகள் என நம்பப்படுகிறது.

மேலும் 2 சடலங்கள் சவப்பெட்டிக்குள் கண்டுபிடிக்கப்பட்டன.

சடலங்கள் அனைத்தும் வீட்டின் பொய்க்கூரைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்தச் சம்பவம் குறித்த தீவிர விசாரணை நடந்துவருகிறது.

சடலங்களை மறைக்க என்ன காரணம் என்று அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

இல்லத்தின் முன்னைய உரிமையாளர் விசாரிக்கப்படவுள்ளார்.  

Top