Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பாபிருசா என்ற அரிய வகை பன்றி குறித்து ஆராய்ச்சியாளர்கள் கவலை

சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கு இடையே இந்தோனேசியாவில் அருகி வரும் பாபிருசா என்ற அரிய வகை பன்றி குறித்து ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
பாபிருசா என்ற அரிய வகை பன்றி குறித்து ஆராய்ச்சியாளர்கள் கவலை

(படம்: Reuters)

சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கு இடையே இந்தோனேசியாவில் அருகி வரும் பாபிருசா என்ற அரிய வகை பன்றி குறித்து ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

வேட்டையாடுதல், காடுகளை அழித்தல் போன்றவற்றால் அவ்வகைப் பன்றி இனம் அழிந்து வருகிறது.

இந்தப் பன்றி இனத்தை இயற்கைப் பாதுகாப்புக்கான அனைத்துலக ஒன்றியம் அருகி வரும் இனங்களின் பட்டியலில் வைத்துள்ளது.

பத்து ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பாவில் இருபதுக்கும் குறைவான பாபிருசா பன்றிகளே காணப்பட்டன.

பிரிட்டனின் செஸ்டர் விலங்குத் தோட்டத்தில் பாபிருசா பன்றிகளின் எண்ணிக்கை 15ஆக உள்ளது.

இதர பன்றி இனங்களைப் போல அல்ல பாபிருசா பன்றி இனம்.

சிறிய குழுக்களாகக் கூடிவாழும் இவை, ஒரு நேரத்தில் சில குட்டிகளை மட்டுமே ஈன்றெடுக்கும்.

உலகெங்கும் உள்ள விலங்குத் தோட்டங்களில் பாபிருசா பன்றி வகையைப் பெருகச் செய்வதற்கு செஸ்டர் விலங்குத் தோட்டம் முயன்று வருகிறது.

இத்தகைய பன்றி வகைகளைக் காண மக்களும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பாபிருசா பன்றி இனம் அழிவதிலிருந்து தடுக்க விலங்கியல் நிபுணர்கள் இந்தோனேசியாவில் உள்ள திட்டங்களுக்கு ஆதரவளிக்கின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்