Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உடலுக்கு வெளியே இதயத்துடன் பிறந்த குழந்தை 14 மாதத்துக்குப் பிறகு வீடு திரும்பியது

இங்கிலாந்தில், உடலுக்கு வெளியே இதயத்துடன் பிறந்த பெண் குழந்தையான Vanellope Hope Wilkins ஆரோக்கியமாக வீடு திரும்பியுள்ளது. 

வாசிப்புநேரம் -
உடலுக்கு வெளியே இதயத்துடன் பிறந்த குழந்தை 14 மாதத்துக்குப் பிறகு வீடு திரும்பியது

படம்: GLENFIELD HOSPITAL

இங்கிலாந்தில், உடலுக்கு வெளியே இதயத்துடன் பிறந்த பெண் குழந்தையான Vanellope Hope Wilkins ஆரோக்கியமாக வீடு திரும்பியுள்ளது. 

அக்குழந்தை 2017ஆம் ஆண்டு மார்பு எலும்பு இல்லாமல் பிறந்தது.

இதயத்தை மீண்டும் மார்பில் வைக்க அதற்கு மூன்று முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

14 மாதங்கள் கழித்து மருத்துவமனையிலிருந்து அக்குழந்தை இல்லம் திரும்பியது. குழந்தையின் தாயாருக்கு இப்போதுதான் நிம்மதி.

நீண்ட, நெகிழ்ச்சியான பயணம் அது என்று குழந்தையின் தாயார் வருணித்தார்.

இப்போதும் குழந்தைக்கு 24 மணி நேரப் பராமரிப்பு அக்குழந்தைக்குத் தேவைப்படுகிறது. சுவாசக் கருவியின் துணையும் குழந்தைக்கு முக்கியம்.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்