Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

விமானத்தில் அழும் குழந்தைகளின் அருகே அமர்வதைத் தவிர்க்க ஏற்பாடு

விமானத்தில் பயணம் செய்யும்போது அழும் குழந்தைகளின் பக்கத்தில் அமர்வதைப் பலரும் தொந்தரவாகவே கருதுவர். 

வாசிப்புநேரம் -
விமானத்தில் அழும் குழந்தைகளின் அருகே அமர்வதைத் தவிர்க்க ஏற்பாடு

படம்: Rahat Ahmed/ Instagram

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

விமானத்தில் பயணம் செய்யும்போது அழும் குழந்தைகளின் பக்கத்தில் அமர்வதைப் பலரும் தொந்தரவாகவே கருதுவர். எட்டு மணிநேர விமானப் பயணத்தில் தொடர்ந்து அழும் குழந்தை பக்கத்தில் அமர்வது கடினம்தான்.

ஜப்பான் ஏர்லைன்ஸ் அந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கண்டுள்ளது.

விமான இருக்கைகளைத் தெரிவு செய்யும்போதே எந்தெந்த இருக்கைகளில் குழந்தைகள் உள்ள குடும்பங்கள் அமர்கின்றன என்பதை அது தெரிவிக்கிறது.

இரண்டு வயது வரையிலான குழந்தைகள் விமானத்தில் எங்கெங்கே அமர்ந்துள்ளனர் என்பதைக் குழந்தையின் முகம் போல இருக்கும் ஒரு சின்னம் காட்டும்.

ஜப்பான் ஏர்லைன்ஸின் இணையப் பக்கம் மூலமாகச் செய்யும் நேரடிப் பதிவுகளில் மட்டுமே தெரியும்.

பயணிகள் சிலர் சமூக ஊடகங்களில் நிறுவனத்தின் முயற்சியைப் பாராட்டினர்.

குழந்தைகளுடன் பயணம் செய்பவர்களுக்கும் சில வசதிகளை வழங்குகிறது ஜப்பான் ஏர்லைன்ஸ்.

குழந்தைகளுக்குத் துணி மாற்றும் இடவசதி,  விமானத்தில் ஏறுவதற்கு முன்னுரிமை, குழந்தைகளுக்கான  வாடகைத் தள்ளுவண்டி வசதி முதலியவற்றை வழங்குகிறது நிறுவனம்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்