Images
  • baby squirrel
    (படம்: Pixabay)

தலைதெறிக்க ஓடிய ஆடவர்... எதைக்கண்டு ஓடினார்?

கரடி, சிங்கம், புலி என்று வனவிலங்குகளைக் கண்டு பலர் அஞ்சுவது வழக்கம். ஜெர்மனியைச் சேர்ந்த ஓர் ஆடவர் எதைக்கண்டு பயந்தார் தெரியுமா?

ஓர் அணில்குட்டியைக் கண்டு அவர் பீதியடைந்தாராம். அத்துடன் அவர் நிறுத்திக்கொள்ளவில்லை.

அணில்குட்டி அவரைத் துரத்திக் கொண்டே இருந்ததால் பயந்துபோய் அவர் காவல்துறையை அழைத்துப் புகார் செய்தார்.

காவல்துறையினர் சம்பவ இடத்தை அடைந்தபோது ஆடவரை அணில்குட்டி இன்னமும் துரத்திக் கொண்டிருந்தது.

துரத்தித்துரத்தி ஓடியதில் சோர்ந்துபோன அணில்குட்டி திடீரென்று ஓடுவதை நிறுத்திவிட்டுத் தரையில் தூங்கத் தொடங்கியபோது ஆடவரின் பயம் போனது.

அணில்குட்டி அதன் தாயிடமிருந்து பிரிக்கப்பட்டிருக்கலாம்.

புதிய வீட்டை தேடிக்கொண்டிருந்தபோது மாற்றுத்தாயாக எண்ணி ஆடவரை அது துரத்த ஆரம்பித்திருக்கலாம் என்று காவல்துறையினர் ஊகிக்கின்றனர்.

அணில்குட்டி விலங்கு மீட்பு நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Top