Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சுவரில் ஒட்டிவைக்கப்பட்ட வாழைப்பழம் - படைப்புக்கு என்ன விலை?

சுவரில் ஒட்டிவைக்கப்பட்ட வாழைப்பழத்தைச் சித்திரிக்கும் கலைப்படைப்பு ஒன்று 120,000 டாலருக்கு விற்கப்பட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -
சுவரில் ஒட்டிவைக்கப்பட்ட வாழைப்பழம் - படைப்புக்கு என்ன விலை?

படம்: sarahecascone/Instagram

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

சுவரில் ஒட்டிவைக்கப்பட்ட வாழைப்பழத்தைச் சித்திரிக்கும் கலைப்படைப்பு ஒன்று 120,000 டாலருக்கு விற்கப்பட்டுள்ளது. அந்தக் கலைப்படைப்பின் பெயர் 'Comedian'. மளிகைக் கடையில் வாங்கப்பட்ட வாழைப்பழம் ஒன்றும் பசை நாடாவும் அந்தப் படைப்பில் இடம்பெற்றுள்ளன.

Maurizio Cattelan என்ற இத்தாலியக் கலைஞர் அந்தப் படைப்பை உருவாக்கியுள்ளார். அதுபோல மூன்று கலைப்படைப்புகள் உருவாக்கப்பட்டன. 

'Art Basel Miami Beach'இல் இரண்டு கலைப்படைப்புகள் விற்கப்பட்டுள்ளன. எஞ்சிய ஒன்று இன்னும் அதிகத் தொகைக்கு விலைபோகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாழைப்பழம் அழுகிப்போனால் என்ன செய்வது என்பதற்கான தெளிவான விளக்கங்கள் வழங்கப்படவில்லை. 


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்