Images
  • atm

அமெரிக்கா: வங்கிக் கணக்கிற்குத் தவறாக மாற்றப்பட்ட 120,000 டாலரைச் செலவுசெய்த தம்பதி

அமெரிக்கா: வங்கிக் கணக்கிற்குத் தவறாக மாற்றப்பட்ட 120,000 டாலரில் கிட்டத்தட்ட அனைத்தையும் செலவுசெய்த தம்பதியின்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மே 31-ஆம் தேதி அன்று, பென்சில்வேனியா (Pennsylvania) மாநிலத்தைச் சேர்ந்த ராபர்ட், டிஃபனி வில்லியம்ஸ் ஆகிய இருவரின் வங்கிக் கணக்கிற்குப் பணம் தவறாக மாற்றப்பட்டது.

ஒரு முதலீட்டு நிறுவனத்திற்கு மாற்றப்படவேண்டிய பணம், தம்பதியின் கணக்கிற்குத் தவறாக மாற்றப்பட்டது ஜூன் 20-ஆம் தேதியன்று வங்கியின் கவனத்திற்கு வந்தது.

அதற்குள் தம்பதி ஏற்கனவே 107,000 டாலரைச் செலவு செய்துவிட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

தங்களின் வங்கிக் கணக்கில் இருந்த பணம் தங்களுக்குச் சொந்தமானதில்லை என்று தெரிந்தும் அதைச் செலவு செய்ததைத் தம்பதி ஒப்புக்கொண்டனர்.

Top