Images
  • Banksy
    படம்: REUTERS 

மர்ம ஓவியர் கைவண்ணத்தில் இங்கிலாந்தின் இன்னொரு வெற்றிடம் கலைப்படைப்பானது

பிரிட்டனைச் சேர்ந்த மர்ம ஓவியர் மீண்டும் தமது
கைவண்ணத்தைக் காட்டியுள்ளார்.

மத்திய இங்கிலாந்தின் நாட்டிங்ஹாம் (Nottingham) நகரில் உள்ள ஒரு சுவரில் இளம்பெண் மிதிவண்டிச் சக்கரத்தை வைத்து hula-hoop விளையாடும் ஓவியம் தோன்றியது.

Hula-hoop என்பது வளையம் ஒன்றை உடலில் சுற்றும் விளையாட்டு அல்லது உடற்பயிற்சி.

இரும்பு அடையாளக் கம்பம் ஒன்றில் பூட்டப்பட்ட, பின் சக்கரம் இல்லாத மிதிவண்டி அருகில், அந்த ஓவியம் செவ்வாய்க்கிழமை அன்று தோன்றியது.

அதை இன்று தமது Instagram பக்கத்தில் பதிவு செய்திருந்தார் Banksy.

உலக நடப்புகளைச் சார்ந்த ஓவியப் படைப்புகளை உருவாக்குவது Banksy-க்குக் கைவந்த கலை.

அண்மையில், அவர் லண்டன் சுரங்க ரயிலில் கிருமித்தொற்று தொடர்பான சித்திரங்களைத் தீட்டினார். 

Top